தேன்கனிக்கோட்டை – ஓசூர் அரசு பஸ் பயணிகளுக்கு அவதி

தேன்கனிக்கோட்டையிலிருந்து ஓசூர் நோக்கி இயக்கப்படும் அரசு டவுன் பஸ் (நெம்பர் 44) நேற்று இரவு 8:50 மணியளவில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்தது. பஸ்சை வெங்கடேசன் இயக்கினார், ஹரிஸ் கண்டக்டராக இருந்தார்.

அப்போது தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், பழுதான பஸ்சினுள் மழைநீர் ஒழுகத் தொடங்கியது. பயணிகள் இருக்கைகளில் அமர முடியாமல் நின்றபடி பயணம் செய்தனர். சிலர் நனையாமலிருக்க குடைகளைத் திறந்து வைத்தனர்.

பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் அமர்ந்திருந்த பகுதிகளிலும் மழைநீர் சிந்தியது. இதனால், அவர்கள் தங்கள் கையில் இருந்த துணிகளை தலையில் போட்டு மழையிலிருந்து தற்காத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வால் பாதிக்கப்பட்ட பயணிகள், "இதே பஸ் கடந்த வாரமும் ஹெட்லைட் வேலை செய்யாத நிலையில் ஓசூர் வரை சென்றது. பயணிகள் பாதுகாப்பு குறித்து நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை. இதுபோன்று மீண்டும் மீண்டும் பிரச்சனைகள் ஏற்படும் நிலையில், டிப்போ அதிகாரிகள் பஸ்சை சரி செய்யாமல் இருப்பது வருத்தம் தருகிறது," எனக் கடுமையாக குற்றம் சாட்டினர்.

Copyright @2024 WMP CREATIVE AGENCY. All rights reserved